உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கூடலூர் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை செப்., 9ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக இடுக்கி அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிட ஒரு வாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணையில் படகு சவாரியும் துவக்கப்பட்டுள்ளது. அணையின் உதவி செயற்பொறியாளர் பிஜூ கூறியதாவது: அணையைப் பார்வையிட நுழைவுக்கட்டணம் 10 ரூபாய்.ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். போட்டோ எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரண்டு விரைவுப்படகுகள் இயக்கப்படுகின்றன. படகு சவாரி செய்ய, ஐந்து பேர் செல்லக்கூடிய படகிற்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ