உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் மீன்பிடிப்பு குத்தகைக்கான ஏலம் ஒத்திவைப்பு

வைகை அணையில் மீன்பிடிப்பு குத்தகைக்கான ஏலம் ஒத்திவைப்பு

ஆண்டிபட்டி : வைகை அணையில் நடந்த கண்மாய் மீன் பிடிப்பு குத்தகைக்கான ஏலம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.மீன் வளர்ப்பு திட்டத்தில் மீன்பிடிப்பு குத்தகையில் குறைந்த பட்ச தொகையாக குள்ளப்புரம் பெரிய கண்மாய்க்கு ரூபாய் 3 லட்சத்து 90 ஆயிரமும், தாமரைக்குளம் கண்மாய்க்கு ரூபாய் 2 லட்சத்து 12 ஆயிரமும், சீலையம்பட்டி சிறுகுளம் ரூபாய் 11 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு நேற்று மூடி முத்திரையிட்ட டெண்டர் பெறப்பட்டது. அதிகப்படியானவர்கள் டெண்டர் கேட்டு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.டெண்டர் எடுக்க வந்தவர்கள் பலரும் பகடி முறையில் வைகை உதவி இயக்குனர் அலுவலகம் அருகே பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பலரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தர முடியாமல் போனது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் மறுதேதி குறிப்பிடாமல் டெண்டரை ஒத்திவைத்ததாக அறிவிக்கப்பட்டதுஆக.30ல் டெண்டர் நடப்பதாக இருந்த ஜெயமங்கலம் வேட்டுவன் குளம், வாய்க்கால்பட்டி தாமரைக்குளம், கோகிலாபுரம் கழுநீர் குளம் ஆகியவற்றிற்கான ஏலமும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை