உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பண்ணையம் அமைக்க சிறப்பு குழு

பண்ணையம் அமைக்க சிறப்பு குழு

தேனி : கூட்டுப்பண்ணையம் அமைத்து விளைச்சலை அதிகரிக்க ஒன்றிய வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.விளைச்சலை இரு மடங்காக பெருக்க கூட்டுப்பண்ணையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு ஒன்றியங்களிலும் மீன்வளம், தோட்டக்கலை, விவசாயம், பட்டு வளர்ப்பு, கால்நடை வளர் ப்பு துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.கூட்டுப்பண்ணைய விவசாயிகளை இக்குழுவினர் சந்தித்து உயர் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு அரசு நலத்திட்ட உதவிகள், மானிய உதவிகள் பெற்றுத்தருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ