உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு எஸ்டேட்களில் எரிசாராயம் விற்பனை

மூணாறு எஸ்டேட்களில் எரிசாராயம் விற்பனை

மூணாறு : மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட்களில், எரி சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.மூணாறில் அரசு சார்பில் மலிவு விலை மதுக்கடைகள் இரண்டு உள்ளன.இருப்பினும் எஸ்டேட் பகுதிகளில் எரி சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் எரி சாராயம், நயமக்காடு,குண்டளை உள்பட சில எஸ்டேட்டுகளில் இருப்பு வைக்கப்பட்டு, பிற பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தற்போது இப் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.இது தவிர ஒரு சில நாட்களில் ஓணப்பண்டிகை வர உள்ளது. இதற்காக எரி சாராயம் கூடுதலாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 15 வயது சிறுவர்கள் முதல் எரிசாராயத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு நன்கு தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்