உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபாட்டில்களுடன் நான்கு பேர் கைது

மதுபாட்டில்களுடன் நான்கு பேர் கைது

மூணாறு : மூணாறில் இருந்து விற்பனைக்காக, மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மூணாறு காலனியைச் சேர்ந்தவர் பீட்டர், 25.இவர் நகரில் உள்ள அரசு மலிவு விலை மதுக்கடையில் இருந்து விற்பனைக்காக 8 லிட்டர் மது வாங்கிச் சென்றார்.இதேபோல் செண்டுவாரை டாப் டிவிஷனைச் சேர்ந்த அய்யனார், 41,ஒன்றரை லிட்டர் மதுவும்,24 பாட்டில் பீரும் விற்பனைக்காக வாங்கி சென்றார்.இதே போல் கல்லார் பகுதியைச் சேர்ந்த மனு, 22,ஜாண்சன், 23, ஆகியோர் 8 லிட்டர் மது விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.இவர்கள் நால்வரையும், எஸ்.ஐ.,பிரின்ஸ்ஜோசப் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ