உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துப்பாக்கி சூடு எதிரொலி தேனியில் தொடரும் கல்வீச்சு

துப்பாக்கி சூடு எதிரொலி தேனியில் தொடரும் கல்வீச்சு

தேனி : பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், தேனி அல்லிநகரம், அன்னஞ்சி, உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, கண்டமனூர், அரண்மனைப்புதூர் உட்பட பல கிராமங்களில் மர்ம கும்பல் இரவில் பஸ்களின் மீது கல், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிவிட்டு தப்பி விடுகிறது.இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் கிராமங்களுக்கு பஸ், மினி பஸ்களை இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்தும் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ