| ADDED : செப் 16, 2011 11:22 PM
தேனி : கடைசிவரை தீராத பிரச்னைக்காக தேனி நகராட்சி கடைசி கூட்டம் வரை, பெண் கவுன்சிலர் முறையிட்டார். தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கடந்த கூட்டத்தில் சாக்கடை கலந்த குடிநீரை கூட்டத்திற்கு கொண்டு வந்த கவுன்சிலர் வசந்தா, மீண்டும் அதே குற்றச்சாட்டை பதிவு செய்தார்.அவர் பேசுகையில், எனது வார்டில் குடிநீரில் சாக்கடை கலக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக நகராட்சி கூட்டத்தில் இது குறித்து முறையிட்டு வருகிறேன். கடந்த கூட்டத்தில் நிரூபிப்பதற்காக சாக்கடை கலந்த குடிநீரை கூட்டத்திற்கு கொண்டு வந்து காட்டினேன். இருந்தும் எந்த நடவடிக்கையும், எடுக்கவில்லை, என்றார்.கூட்டத்தில் வைகை அணை பிக் அப் டேமில் இருந்து 80 கோடி ரூபாயில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான, ஆய்வுப்பணிகளை செய்வதற்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.