உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / "நம்பிக்கை வீண் போகாது அமைச்சர் விசுவநாதன்

"நம்பிக்கை வீண் போகாது அமைச்சர் விசுவநாதன்

வத்தலக்குண்டு : ''ஆட்சி மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது,'' என அமைச்சர் விசுவநாதன் பேசினார்.வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது. ஆர்.டி.ஓ.,பெருமாள் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அசோகன் வரவேற்றார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது: அரசு பள்ளி மாணவர்கள் போட்டிகளை சமாளிக்கும் வகையில் லேப்டாப், கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அ.தி.மு.க.,அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார். தொடர்ந்து தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் படிப்படியாக நடக்கும், என்றார். தலைமை ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார். வத்தலக்குண்டு அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் மோகன், சேவுகம்பட்டி நகர செயலாளர் மாசானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்