உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக வேலை உறுதி திட்டம்சம்பளம் கொடுப்பது யார்?

ஊரக வேலை உறுதி திட்டம்சம்பளம் கொடுப்பது யார்?

கம்பம்: ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சம்பளம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,செப்.,27ல் வழங்க வேண்டிய, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்கான சம்பளத்தை, கிராம ஊராட்சி வார்டுகளுக்கு மனு வாங்கும் உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் வழங்க வேண்டும். அக்., 4ல் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் அந்தஸ்தில் உள்ள அலுவலர் வழங்க வேண்டும். அக்.,18 ல் வழங்க வேண்டிய சம்பளத்தை,19 ல் தேர்தல் நடப்பதால், 24 ல் வழங்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவிற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.1,300 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இது கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என,கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை