உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆந்திர கஞ்சா வியாபாரியை கைது செய்த தேனி போலீசார்

ஆந்திர கஞ்சா வியாபாரியை கைது செய்த தேனி போலீசார்

தேனி: தேனி மாவட்டத்தில் விற்பனை செய்ய கஞ்சா வழங்கிய ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டம் மஜ்ஜி மணிகண்டஸ்ரீனிவாஸ் 36, என்பவரை தேனி போலீசார் கைது செய்தனர்.ராயப்பன்பட்டி எஸ்.ஐ., அருண்பாண்டி தலைமையிலான போலீசார் 2024 நவ. 3ல் நாராயணத்தேவன்பட்டியில் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெய் அனந்த் பிரகாஷ் 35,சதீஷ் 24, சுரேஷ் 28, சுருளிப்பட்டியை சேர்ந்த குமரேசன் 48, ஆகியோரிடம் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா, டூவீலரை கைப்பற்றினர். நால்வரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் நரசிப்பட்டினம் சீடிகுமலா பகுதியை சேர்ந்த மஜ்ஜி மணிகண்ட ஸ்ரீனிவாஸ் என்பவர் விற்பனைக்கு கஞ்சா வழங்கியதாக தெரிவித்தனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் மஜ்ஜி மணிகண்ட ஸ்ரீனிவாசை கைது செய்து, நரசிப்பட்டினம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வாரண்ட் பெறப்பட்டு, தேனி அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !