மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி
18-Nov-2024
தேனி : தேனி ரயில்வே ஸ்டேஷன் பழைய டிக்கெட் கவுண்டர் கட்டடம், பயன்பாடில்லாத கழிப்பறை பகுதிகள் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.தேனி மாவட்டத்திற்கு தினமும் மதுரையில் இருந்து போடிக்கு ஒரு ரயிலும், வாரத்தில் 3 நாட்கள் சென்னையில் இருந்து போடிக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்திலும் இதே நிலை தொடர்கிறது. இதனால் தேனி ரயில்வே ஸ்டேஷனில் பகல் நேரத்தில் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை ரயில் இல்லாத தினங்களில் 7:00 மணிக்கு மேல் ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்கு யாரும் செல்வது இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் ரயில்வே ஸ்டேஷன் பழைய டிக்கெட் கவுண்டர் இருந்த பகுதியை 'மது பாராக' மாற்றி வருகின்றனர். அந்த பகுதியில் அதிக அளவில் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் இரவு ரோந்து செல்லவும், பயன்பாட்டில் இல்லாத கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18-Nov-2024