ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது
தேனி:ஒடிசாவில் இருந்து தேனிக்கு ரூ.5.72 லட்சம் மதிப்புள்ள 29 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆந்திர பெண் உட்பட மூவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இப்பிரிவின் தேனி இன்ஸ்பெக்டர் பாக்கியம் தலைமையிலான போலீசார் தேனி -- திண்டுக்கல் பைபாஸ் ரோடு வத்தலக்குண்டு பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது கூடலுார் பட்டாளம்மன் கோயில் தெரு சோமுமுத்தையா 55, அதேபகுதி ஒட்டர் தெரு கார்த்திக் 22, ஆந்திரா,அனங்கப்பள்ளி மாவட்டம், சோடாவரத்தை சேர்ந்த லட்சுமி 45, ஆகிய மூவர் சந்தேகப்படும் படி நின்றிருந்தனர். விசாரணையில் ஒடிசாவில் இருந்து மூவரும் பஸ்சில் கடத்திவந்த 28 கிலோ 820 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தனர். அதன் மதிப்பு ரூ.5.72 லட்சம். மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.