உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணிடம் அத்துமீறிய மூன்று ஆட்டோ டிரைவர்களுக்கு  குண்டாஸ்

பெண்ணிடம் அத்துமீறிய மூன்று ஆட்டோ டிரைவர்களுக்கு  குண்டாஸ்

தேனி: வீரபாண்டியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள் குணால் 21, விக்னேஷ் 27, ஹரிஹரன் 21 ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தர விட்டார். வீரபாண்டி முல்லைப்பெரியாறு மேல் தடுப்பணை பகுதியில் கடந்த ஜூலையில் இரு பெண்கள் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த வீரபாண்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் குணால், விக்னேஷ், ஹரிஹரன் ஒரு பெண்ணிடம் மிரட்டி தவறாக நடக்க முயன்றனர். மற்றொரு பெண் ஆண் நண்பருடன் தப்பித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை தனிப்படை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தர விட்டார். தேனி மாவட்ட சிறையில் இருந்த மூவரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை