உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருக்குறள் போட்டி : பரிசளிப்பு விழா

திருக்குறள் போட்டி : பரிசளிப்பு விழா

--பெரியகுளம் : பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்ற 69 வது ஆண்டு விழா திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா தலைவர் ரத்தினவேலு தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் புலவர் சுப்பிரமணியன், பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். புலவர் ராஜரத்தினம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா பேசினார். திருக்குறள் போட்டியில் ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி முதலிடம் பெற்றது பி.டி.சி.,நினைவு சுழற் கோப்பையை செயலாளர் சிதம்பரசூரிய வேலு வழங்கினார். எட்வர்ட் நினைவு நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடமும், டிரம்ப் நடுநிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பிடித்தது. 1330 குறட்பாக்களை ஒப்புவித்தல், கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை