நாளை வேலை வாய்ப்பு முகாம்
தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப்.,21) வெள்ளிக் கிழமை காலை 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 10ம் வகுப்பிற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள், சுயவிபர நகல், கல்விச்சான்றுகள் நகல்களுடன் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 76959 73923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.