உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரம் முறிந்து விழுந்து சுற்றுலா படகு சேதம்

மரம் முறிந்து விழுந்து சுற்றுலா படகு சேதம்

மூணாறு; மூணாறு அருகில் உள்ள குண்டளை அணையை மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர். அங்கு மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் சார்பில் பெடல், துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதியினர் மிகவும் விரும்பும் காஷ்மீர் சிக்காரா உள்பட பல்வேறு வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. படகு குழாமை சுற்றி ராட்சத கிராண்டீஸ் மரங்கள் ஏராளம் உள்ளன.இந்நிலையில் படகு குழாமில் நேற்று மதியம் 2:30 மணிக்கு திடீரென கிராண்டீஸ் மரம் முறிந்து விழுந்தது. அதனை பார்த்து சுற்றுலா பயணிகள் அலறியடித்து சிதறி ஓடி உயிர் தப்பினர். மரம் விழுந்து கரையில் நிறுத்தி இருந்த காஷ்மீர் சிக்காரா படகு சேதமடைந்தது. அச்சம்பவத்தால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ