உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்

காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்

மூணாறு : மூணாறு அருகே மாட்டுபட்டி அணையின் அருகில் உள்ள புல்மேடுகளில் நான்கு காட்டு யானைகள் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளன.அவை புல்லை நன்றாக தின்று விட்டு நீர் அருந்த அணைக்குச் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் காட்டு யானைகள் நீர் அருந்தி விட்டு கரையில் பல்வேறு குறும்புகளில் ஈடுபடுகின்றன. தண்ணீரில் ஆனந்த குளியலிடும் யானைகள் கரையில் சேறு, சகதியில் உருண்டு, புரண்டு ஒரு கட்டத்தில் அயர்ந்து பல மணி நேரம் தூங்கி விடுகின்றன. அந்த காட்சிகளை சுற்றுலா படகில் பயணித்த பயணிகள் வெகுவாக ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி