விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
தேவாரம்: தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் சார்பில் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் வேளாண் உதவி அலுவலர் சிவா தலைமையில் நடந்தது. தேவாரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஆர்த்தி, அன்பழகி, தனுஸ்ரீ, கவுசிகா, மதுமதி, நிலாஸ்ரீ, பிரியதர்ஷினி, சாகித்யா, சுமயா உள்ளிட்ட மாணவிகள் கலந்து கொண்டு உழவன் செயலி பற்றிய தகவல்கள், பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.