பயிற்சி வகுப்பு
தேனி: தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாடுகள் துறை சார்பில் யூ.ஐ., யூ.எக்ஸ்., வடிவமைப்பின் அடிப்படை கூறுகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மாவி அபிநயாஜோதி வரவேற்றார். தனியார் நிறுவன நிர்வாகிகள் கெளஷிகன், அபிஷேக் யூ.ஐ.,யூ.எக்ஸ்., அடிப்படை பயன்கள் பற்றி பயிற்சி வழங்கினர். மாணவி ஜெஸ்ரீ நன்றி கூறினார். பேராசிரியர்கள் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனர்.