உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்களுக்கு பயிற்சி

தேனி: மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில் 1,2,3 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான ஆன்லைன் பயிற்சிகள் கடந்தவாரம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டார வள மையங்களில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வளமையங்களிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. உதவி திட்ட அலுவலர் மோகன் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டார். தேனி அல்லிநகரம் வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சி வகுப்பை மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை