உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி்

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி்

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபைதொகுதிகளுக்கும்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.ஆண்டிப்பட்டி 33, பெரியகுளம் 29, போடி 35, கம்பம் 30 என,127 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுஉள்ளன.மாவட்டத்தில் மொத்தம் 1225 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, போலீசார் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.இவர்களுக்கு தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின்நேர்முக உதவியாளர் சிந்து பயிற்சியை துவங்கி வைத்தனர். பயிற்சியில் தேர்தல் அறிவிப்பிற்கு பின் செயல்பாடுகள், ஓட்டுப்பதிவிற்கு முந்தையநாள் செயல்பாடுகள், ஓட்டுப்பதிவு அன்று செய்ய வேண்டியவைஉள்ளிட்டவை பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.பேரிடர் மேலாண்மைத் துறை தாசில்தார் பாலசண்முகம், மாநில, மாவட்ட பயிற்றுனர்கள் பயிற்சி வழங்கினர்.பயிற்சி ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை