மேலும் செய்திகள்
3,800 ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன் விடுவிப்பு
26-Aug-2025
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தேனி மாவட்டத்தின் மாதாந்திர கூட்டம், வீரபாண்டியில் இன்று(செப்.,8) நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், 5 தீர்மானங்களை நிறைவேற்றினர். பணப்பலன் வாங்காத தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்; மீதமுள்ள டி.ஏ., உயர்வினை உடனே வழங்க வேண்டும்; போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்; கருவூலம் மூலம் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-Aug-2025