உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

கம்பம் : இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற பவள விழாவை முன்னிட்டு கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் நடந்த இவ்விழாவில், பள்ளி வளாகத்தில் தாளாளர் மரக்கன்றுகள் நடவு செய்து, விழாவை துவைக்கி வைத்து பேசியதாவது: சம்பிரதாயத்திற்காக மரக்கன்றுகளை நடவு செய்யக் கூடாது. நடவு செய்த மரக்கன்றுகளை கட்டாயமாக கண்காணித்து, பராமரிக்க வேண்டும். சுற்றுப் புறச்சூழல் மாசுபட்டுள்ளது. எனவே மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதை ஒரு இயக்கமாக மாற்ற, அனைவரும் பாடுபட வேண்டும்., என்றார். பள்ளியின் முதல்வர் கருப்பசாமி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் அரசியலமைப்பு சட்ட ஏற்புரை, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி