உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது

பூட்டிய வீடுகளில் திருடிய இருவர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாரி எஸ்டேட்டில் 292 குடியிருப்புகள் உள்ளது.டி.காமக்காபட்டியைச் ராஜசேகர் 45. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் முத்துச்சாமி 40. இருவரும் பூட்டியிருந்த குடியிருப்பு எண் 9, 38 மற்றும் 228 ஏ ஆகிய வீடுகளில் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று,பிரிட்ஜ் 2, வாஷிங்மிஷின் 1, எல்.இ.டி., டி.வி., உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடினர். தேவதானப்பட்டி போலீசார் இவர்களிடமிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி, ராஜசேகர், முத்துச்சாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !