மேலும் செய்திகள்
வாகனத்தில் கஞ்சா இருவர் கைது
21-Apr-2025
பெரியகுளம்: முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திகுத்து இருவரை போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் எ.புதுக்கோட்டை நேரு நகர் சென்ட்ரிங் தொழிலாளி சிந்தனை செல்வம் 19. இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் 23, அசோக்குமார் 48, பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தனது நண்பருடன் நடந்து சென்ற சிந்தனை செல்வத்தை, அசோக்குமார் பிடித்துக் கொள்ள ஹானஸ்ட்ராஜ் கத்தியால் குத்தினார். காயமடைந்த சிந்தனை செல்வம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வடகரை போலீசார் ஹானஸ்ட்ராஜ், அசோக்குமாரை கைது செய்தனர். நால்வர் மீது வழக்கு
ஹானஸ்ட்ராஜ் தாயார் ரெஜினாமேரி போலீசில் புகார் அளித்தார். அதில் 'நானும், எனது அக்கா மகள் கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த போது சிந்தனை செல்வம், அவரது அப்பா குமார், அண்ணன் சித்திரை செல்வம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கை, கம்பால் தாக்கி, ஹானஸ்ட்ராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வடகரை போலீசார் சிந்தனை செல்வம் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.-
21-Apr-2025