உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத்தெருவைச் சேர்ந்தவர் சப்தகிரி 42. இவர் கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் போட்டோகிராபராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியகுளம் வீட்டை சப்தகிரி உறவினர் ரமேஷ் பராமரித்து வருகிறார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் பூஜையை அறையில் பீரோ பூட்டை உடைத்து வெள்ளி கால்காப்பு, வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கொடி, இரு லேப்டாப், கைக்கடிகாரங்கள் 2 என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது. வடகரை போலீசார் விசாரித்தனர். வீட்டில் திருடிய அழகர்சாமிபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த புவனேஸ்வரன் 26. அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் சச்சினை 20. போலீசார் கைது செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை