உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : இருவர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : இருவர் மீது வழக்கு

தேனி:தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த ஈஸ்வரன், சேலம் தலைவாசல் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை உசிலம்பட்டி வி.கே.எஸ்., தெரு கண்ணன் 62. இவரது மகள் யோக கார்த்திகா. எம்.பி.ஏ., முடித்து அரசு வேலை தேடினார். இதுகுறித்து நண்பர் தேனியை சேர்ந்த ஈஸ்வரனிடம் தெரிவித்தார். அதற்கு ஈஸ்வரன், ‛சேலம்ஆத்துார் தாலுகா தலைவாசலில் வசிக்கும் சரவணன் எனக்கு நண்பர். அவர் பலருக்கு அரசு வேலைவாங்கிக் கொடுத்து வருகிறார்,' எனக்கூறினார். பின் சரவணன், கண்ணனை தொடர்பு கொண்டு 'ரூ.10 லட்சம் கொடுத்தால் தேனி ஊரக வளர்ச்சித் துறையில்வேலை வாங்கித் தருகிறேன். பணி ஆணை கிடைத்த பின் பணம் கொடுத்தால் போதும் 'என்றார். 2020ல் கண்ணனை அலைபேசியில் அழைத்த ஈஸ்வரன், 'மகளுடன் தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் வாருங்கள். பணி ஆணை தயாராக உள்ளது'என்றார். அங்கு மகளுடன் சென்ற கண்ணனிடம், ஈஸ்வரன் ஒரு கடிதம் வழங்கினார். அப்போது ரூ.6 லட்சத்தை ஈஸ்வரன், உடனிருந்த சரவணன் பெற்றுக் கொண்டனர். அதன் பின் தேனி ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணி ஆணையை காண்பித்தபோது அது போலி என தெரியவந்தது. பாதிக்கப்பட்ட கண்ணன், ஈஸ்வரனிடம் பணத்தை திருப்பிக்கேட்டார்.அதில் ரூ.4 லட்சத்தை மட்டும் திருப்பி வழங்கினார். மீதியுள்ள ரூ.2 லட்சத்தை வழங்காமல் இருவரும் ஏமாற்றினர். ஈஸ்வரன், சரவணன் மீது தேனி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை