உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருவர் தற்கொலை

இருவர் தற்கொலை

போடி : போடி அருகே சிலமலை ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் 52. இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் பிளேட் வைத்து உள்ளனர். இதனால் ஏற்பட்ட வலியால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். 20 நாட்களுக்கு முன்பு வலி தாங்க முடியாத நிலையில் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சுத்துவாங்கி ஓடையில் இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மகேஸ்வரி புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* போடி அருகே துரைராஜபுரம் காலனி சேர்ந்தவர் வைஷ்ணவி 29. இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். வயிற்று வலியால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயார் அழகுமணி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ