மேலும் செய்திகள்
நெல் கமிஷன் ஏஜன்ட் கடத்தல்
06-Mar-2025
போடி: போடி அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பூமிகா 24. இவர் தனது கணவர் ராஜதுரை, மகன்கள் யுவனேஷ் 3,, பிரனேஷ் 5., ஆகியோருடன் அருகே கோணாம்பட்டியில் உள்ள ஹரிஹரன் 19. என்பவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது ஹரிஹரன் தனது டூவீலரில் யுவனேஷ் என்ற சிறுவனை ஏற்றிக் கொண்டு தம்மிநாயக்கன்பட்டி ரோட்டில் வேகமாக சென்றுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஹரிகிருஷ்ணன், யுவனேஷ் பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதில் ஹரி கிருஷ்ணன் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். பூமிகா புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
06-Mar-2025