உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இதுவரை இல்லாத அளவில் சபரிமலை செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு

இதுவரை இல்லாத அளவில் சபரிமலை செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு

கம்பம்:சபரிமலை ஐயப்ப சுவாமியை தரிசிக்க மண்டல காலம் துவங்கியது முதல் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல துவங்கி உள்ளன.சபரிமலை ஐயப்பன் கோயில் உற்ஸவம் துவங்கிய கார்த்திகை முதல் தேதியிலிருந்து மாலை அணிந்து விரதத்தை பக்தர்கள் துவக்குவர். 48 நாட்கள் விரதத்திற்கு பின் சபரிமலை செல்வார்கள். மார்கழி, தை மாதங்களில் மண்டல பூஜை, மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் கூட்டம் இல்லை. கார்த்திகை முதல் நாள் முதல் அதிக வாகனங்கள் சபரிமலை சென்றன.கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் இரவு முழுதும் சென்றன. தற்போது பகலிலும் அதிக வாகனங்கள் செல்கின்றன. பாதயாத்திரை பக்தர்களும் அதிக எண்ணிக்கையில் செல்வதால் போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஒரு வழிப்பாதையாக கம்பமெட்டு ரோட்டில் பக்தர்களின் வாகனங்களை திருப்பி விடுகின்றனர். கம்பமெட்டில் இருந்து பெரும்பாலான வாகனங்கள் புத்தடி, அணைக்கரை வழியாக குமுளி சென்று, வழக்கமான ரோட்டில் செல்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு வாகனங்கள் அதிகளவில் சபரிமலையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை