மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
1 minutes ago
நாளை (அக்.,6) கலந்தாய்வு
1 minutes ago
சனிப்பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
1 minutes ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருப்பணசாமி மலைக்குன்றில் அமைந்துள்ள சமண சிற்பங்களை பாதுகாக்க வேலி அமைக்கவும் தொல்லியில் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இம்மலைக்குன்றின் அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களும், அதன் அடியில் உள்ள சுனை நீரும், சமணர்கள் இப்பகுதியில் தங்கி வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகளாக உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டி இந்த இடத்தை ஏற்கெனவே மத்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி உள்ளது. அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளது. சிற்பங்கள் சேதமடையாமல் இருக்க கருங்கற்களால் ஆன 'ஷெட்' ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.இருந்த போதும் இந்த சிற்பங்கள் அமைந்த பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறி விட்டன. சமூக விரோதிகள் இந்த இடத்தில் அமர்ந்து மது அருந்துவதும், சமூக விரோத செயல்கள் செய்வதுமாக உள்ளனர். நாளடைவில் இந்த சிற்பங்கள் காணாமல் போக வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் செய்த புகாரை தொடர்ந்து, தொல்லியல் துறை இந்த பகுதியை வேலி அமைக்கவும், செக்யூரிட்டி ஒருவரை நியமித்து பாதுகாக்கவும் முடிவு செய்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரலாற்று சின்னங்களான சமணர் சிற்பங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 minutes ago
1 minutes ago
1 minutes ago