உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்மாய் கரையில் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கண்மாய் கரையில் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கூடலுார்: கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது முதல் போக சாகுபடி நடந்து வருகிறது. கண்மாயில் நீர் போதிய அளவு இருப்பு உள்ளது. இரண்டு கி.மீ., தூரம் கொண்ட இக் கண்மாயின் கரைப்பகுதியில் பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இவை நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாகும். கண்மாயில் தண்ணீர் குறையும் போது விரைவாக நீரை உறிஞ்சி விவசாயத்திற்கு அதிக அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். சில மாதங்களுக்கு முன்பு சோலைக்குள் கூடல் அமைப்பினர் கண்மாய் கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி புதிய மரக்கன்றுகளை நட்டனர். இருந்த போதிலும் தற்போது பல இடங்களில் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனை உடனடியாக வெட்டி அகற்ற வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை