உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த கேமராக்கள் சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த கேமராக்கள் சீரமைக்க வலியுறுத்தல்

தேனி: தேனி நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதில் சுணக்கம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நகர் பகுதியின் சில இடங்களில் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. அதே போல் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால், இந்த கேமராக்களை சில சமூக விரோதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட், சிவாஜிநகர், பைபாஸ் ரோடு சந்திப்பில் நடக்கும், விபத்துக்கள், குற்ற சம்பவங்களை தடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக பஸ் ஸ்டாண்ட், அதனை சுற்றி உள்ள கேமராக்கள் பல மாதங்களாக தரை, வான் பகுதியை நோக்கியவாறு திருப்பி வைக்கப்பட்டு உள்ளன. மதுரை ரோட்டில் பென்னிகுவிக் நகர் சந்திப்புப் பகுதியில் கேமராக்கள் சேதமடைந்து உள்ளன. கேமராக்கள் சரியாக இயங்குவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ