உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உ.வே.சா., பிறந்தநாள் விழா

உ.வே.சா., பிறந்தநாள் விழா

கூடலுார்: கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் தேடல் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.1855 பிப்.19ல் பிறந்த உ.வே. சாமிநாதஅய்யரின் வரலாறு, தமிழ் தொண்டு குறித்து இலக்கிய மன்றத்தின் நிறுவனத் தலைவர் கவிஞர் திராவிடமணி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் சுரேந்திரன், கவிஞர் முருகன், பாடகர் அப்துல் ரகுமான் பேசினார்கள்.உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினம் என அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இணைச் செயலாளர் சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் அரசு, பள்ளி தாளாளர் மூர்த்திராஜன், தலைமையாசிரியர் அதிபர், ஆசிரியர்கள் ஞானசேகரன், ரெங்கேஷ்குமார், பாஸ்கரன், கார்த்திகேய பாண்டியன், கோகுலகண்ணன், ஜெயசித்ரா, கனியமுது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி