உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாய்களுக்கு தடுப்பூசி

நாய்களுக்கு தடுப்பூசி

கூடலுார: கடந்த சில நாட்களாக கூடலுார் நகராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமானது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலாவரும் நாய் கூட்டங்களால் பெரிதும் அச்சமடைந்தனர். மேலும் சமீபத்தில் காந்திகிராமத்தைச் சேர்ந்த சிறுமியை நாய் கடித்ததில் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கூடலுார் பகுதியில் சுற்றித்திரிந்த 83 தெரு நாய்களை நகராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு கால்நடை டாக்டர் தலைமையில் வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் வாசுதேவன், சுகாதார ஆய்வாளர் விவேக் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை