மேலும் செய்திகள்
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்
25-Oct-2025
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம் 70 அடியை கடந்ததால் வெள்ள அபாயம் எச்சரிக்கை தொடர்கிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழையால் முல்லைப்பெரியாறு, வருஷநாடு மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருந்தது. அக்.,18 காலை 6:00 மணிக்கு 62.47 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. அக்., 20ல் 69 அடியானது. அணையின் மொத்த உயரம் 71 அடி. பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. மழை குறைந்ததால் அணை நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த நீர்வளத்துறையினர் முடிவு செய்தனர். சில நாட்களில் படிப்படியாக உயர்ந்த நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணிக்கு 70.06 அடியாகவும் மதியம் 12:00 மணிக்கு 70.11 அடியாகவும் உயர்ந்தது. அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. இந்நிலையில் வைகை அணை பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்காக நீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எந்த நேரத்திலும் ஆற்றின் வழியாக கூடுதல் நீர் திறக்கும் சூழல் இருப்பதால் கரையோரம் வசிப்போர், விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2101 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 1430 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
25-Oct-2025