உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 70 அடி நோக்கி வைகை அணை நீர்மட்டம் உயருது

70 அடி நோக்கி வைகை அணை நீர்மட்டம் உயருது

ஆண்டிபட்டி: தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்.18ல் 62.66 அடியாக இருந்த நீர்மட்டம் அக்.21ல் 69 அடியாக உயர்ந்தது. அணையின் உயரம் 71 அடி. அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைக்கான சூழல் இருந்ததால் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக நீர்வரத்து குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அணை நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த நீர்வளத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் 69.13 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 69.31 அடியாக உயர்ந்தது. பின், மதியம் 12:00 மணிக்கு 69.29 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு, நீர்மட்டம் உயர்த்தப்பட உள்ளது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1842 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வைகை ஆற்றின் வழியாக வினாடிக்கு 2004 கன அடி, குடிநீருக்காக 69 கன அடி நீர் வெளியேறுகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !