உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நீர் வரத்து குறைந்துள்ளதால் குறையுது வைகை நீர்மட்டம்

 நீர் வரத்து குறைந்துள்ளதால் குறையுது வைகை நீர்மட்டம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களில் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த மாதம் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.27ல் 70.24 அடிவரை உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களில் பாசனத்திற்காக ஜூன் 15 முதல் கால்வாய் வழியாக அணையில் இருந்து தொடர்ந்து நீர் செல்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் வைகை பூர்வீக பாசனத்திற்காக ஆற்றின் வழியாக அக்.27ல் திறக்கப்பட்ட நீர் தற்போது வரை தொடர்கிறது. 58ம் கால்வாய் வழியாகவும் அணையில் இருந்து கடந்த சில நாட்களில் நீர் வெளியேற்றம் இருந்தது. இதனால் நவ.10ல் 68.41 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 65.85 அடியாக குறைந்துள்ளது. நவ.13ல் வினாடிக்கு 1745 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று வினாடிக்கு 628 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து பாசனம், குடிநீருக்காக வினாடிக்கு 2399 கன அடி நீர் வெளியேறுகிறது. தற்போது மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறுகள் மூலம் நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர் மட்டும் வைகை அணை வருகிறது. வைகை அணையின் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை