மேலும் செய்திகள்
சர்வசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
26-Nov-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்பலாபுரத்தில் வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 3 நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 2ம் நாளில் புண்ணியாக வாஜனம், 2ம் கால பூஜை, பூர்ணாஹூதி, விமான கலச ஸ்தாபனம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நிறைவு நாளில் பிம்பசுத்தி, ரக் ஷபந்தன், 4ம் காலயாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, நிகழ்ச்சிகளுக்கு பின் கோபுர கலசங்களுக்கும், மூலஸ்தானத்திலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
26-Nov-2025