உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வித்யா சரஸ்வதி ஹோம பூஜை

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வித்யா சரஸ்வதி ஹோம பூஜை

போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத நடந்த வித்யா சரஸ்வதி ஹோம பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இக்கோயிலில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்கான வித்யா சரஸ்வதி ஹோம பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. ஏராளமான மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். வித்யா ஹோமம் பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், குங்குமத்துடன் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ