மூணாறு, தேவிகுளம் ஊராட்சிகளில் வார்டு ஒதுக்கீடு
மூணாறு: மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளில் குலுக்கல் அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கப்பட்டன. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வார்டுகள் மறு சீரமைப்பு பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தது. தற்போது மாவட்டம் வாரியாக வார்டுகள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் பைனாவ்வில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் வார்டுகள் ஒதுக்கும் பணி அக்.13ல் துவங்கி நடந்து வருகிறது. மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளில் வார்டுகள் நேற்று ஒதுக்கப்பட்டன.