சேமிப்பு கிடங்கு தொழிலாளி இறப்பு: இழப்பீடு கோரி முற்றுகை
தேனி: தேனி ரத்னா நகர் அரசு சேமிப்பு கிடங்கில் சுமை துாக்கும் தொழிலாளி சக்திவேல் 57, உடல் நலம் பாதித்து இறந்தார். குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சி.ஐ.டி.யு., கட்சியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த சுமைப்பணி தொழிலாளி சக்திவேல், சேமிப்பு கிடங்கில் பணியில் ஈடுபட்ட போது, செப். 22ல் உடல் நலம் பாதித்து இறந்தார். குடோன் நிர்வாகத்தினர் அப்போது இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சக்திவேல் உடலை அடக்கம் செய்தனர். இதுவரை இழப்பீடு வழங்காததை கண்டித்து இறந்தசக்திவேல் குடும்பத்தினர், சி.ஐ.டி.யு., மாவட்டக்குழு தலைவர் ஜெயபாண்டி, பொதுச் செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ, மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டனர். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் இளவரசன், நிறுவன மேலாளர் ரவிக்குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் அக்.18ல் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.