உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணை திறக்க உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெரியாறு அணை திறக்க உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மூணாறு: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதும், அணை திறக்க உள்ளதால், பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும்பட்சத்தில் ' ரூல் கர்வ்' முறைபடி ஸ்பில்வே ஷட்டர்கள் திறக்கப்படும். அந்த தண்ணீர் பெரியாறு ஆற்றின் வழியாக இடுக்கி அணைக்கு வந்து சேரும். தற்போது அணை திறக்க வாய்ப்புள்ளதால், பெரியாறு, மஞ்சுமலை, உப்புதரா, ஏலப்பாறை, அய்யப்பன் கோவில், காஞ்சியாறு, ஆனவிலாசம், உடும்பன்சோலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. அதனை அப்பகுதிகளில் போலீஸ், வருவாய் ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். அப்பகுதிகளில் வசிக்கும் 883 குடும்பங்களைச் சேர்ந்த 3220 பேரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு வசதியாக 20க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 135.90 அடியாக இருந்தது.நீர்மட்டம் 136 அடியை எட்டியதும் அணை திறக்கப்படும். பாதுகாப்பு கருதி பகல் வேளையில் அணையை திறக்குமாறு தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை