உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

 இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

தேனி: விவசாயிகளை இணை உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது, விதிமீறும் உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் திலகர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள தனியார், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா 1089 டன், டி.ஏ.பி., 663 டன், பொட்டாஷ் 448 டன், காம்ப்ளக்ஸ் 3250 டன், சூப்பர் பாஸ்பேட் 390 டன் இருப்பு உள்ளன. விவசாயிகள் சாகுபடி செய்ய பயிர்களுக்கு ஏற்ப யூரியா வாங்க வேண்டும். தேவையின்றி அதிக அளவில் உரம் வாங்கும் விவசாயிகள் கண்காணிக்கப்படுவார்கள். விற்பனையாளர்கள் இணை உரங்கள் வாங்க வேண்டும் என விவசாயிகளை கட்டாய்ப்படுததக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட விலையை (எம்.ஆர்.பி.,) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது. இருப்பு பதிவு முறையாக பராமரிக்க வேண்டும். விதிமீறும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் விவசாயிகள் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், உதவி இயக்குநர் அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை