உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பழைய பஸ் ஸ்டாண்டில் ஓடும் கழிவு நீர்

பழைய பஸ் ஸ்டாண்டில் ஓடும் கழிவு நீர்

தேனி; தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் தற்போது ராஜவாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் குறுகலான இடத்தில் பஸ்கள் சென்றுவருகின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு பஸ் ஸ்டாண்டில் ஆறாய் ஓடுகிறது.அந்த கழிவு நீர் துர்நாற்றத்துடன் அங்குள்ள பள்ளங்களில் தேங்குகிறது. பள்ளத்தில் பஸ், ஆட்டோ செல்லும் போது பயணிகள் மீது தெளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் ரோட்டில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை