மாதிரி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, தேவதானப்பட்டி உட்பட 30 க்கும் அதிகமான கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1900 பேர் படித்து வருகின்றனர். குடிநீருக்காக கல்வி துறை மூலம் இரு இடங்களில் சில மாதங்களுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வைத்தனர். முறையாக குடிநீர் இயந்திரம் அமைக்காததால் குழாயிலிருந்து சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு தண்ணீர் செல்லவில்லை. மற்றொரு சுத்திகரிப்பு இயந்திரமும் இதே நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். புத்தகம், நோட்டுச்சுமையுடன், குடிநீர் கேன்கள் தூக்கி வருவதற்கு சிரமப்படுகின்றனர். பள்ளி கல்வித்துறை இரு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.