உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வாரம் 10 ஆய்வு கூட்டங்கள்  தினமும் 2 மணி நேர திறனாய்வு: எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் புலம்பல்

 வாரம் 10 ஆய்வு கூட்டங்கள்  தினமும் 2 மணி நேர திறனாய்வு: எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்கள் புலம்பல்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களுக்கு வாரம் 10 ஆய்வு கூட்டங்கள் நடத்துவதும், தினமும் 2 மணி நேரத்திற்கு விளக்கம் கேட்டு திறனாய்வு செய்யும் உயர் அதிகாரிகளால் விசாரணை பணிகளை கவனிக்க முடியவில்லை என, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் புலம்பி தவிக்கின்றனர். மாவட்டத்தில் 36 போலீஸ் ஸ்டேஷன்கள், 4 டிராபிக் ஸ்டேஷன்கள் என 40 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. காலையில் ஸ்டேஷன் ரோல் கால் மீட்டிங்கிற்கு வரும் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்களை வாரத்திற்கு மூன்று முறை ஆய்வு கூட்டம் என டி.எஸ்.பி.,க்கள் தங்கள் அலுவலங்களுக்கு அழைக்கின்றனர். அது போதாது என எஸ்.பி., அலுவலகம் மூலம் அடிக்கடி வழக்கு விசாரணைக்கான ஆய்வுக்கூட்டங்கள் வாரந்தோறும் 10 முறை நடத்துகின்றனர். இதில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால் அதிகாரிகள் வழக்கு விசாரணையில் முன்னோக்கி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு வழக்கு பதிவு செய்ய, காய சான்றிதழ்'களை மருத்துவமனை நிர்வாகங்கள் தர வேண்டும். ஆனால் அதற்கு ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு போலீஸ்காரர் வீதம் 36 பேர் நாள் தோறும் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே விசாரணை அதிகாரிகளை டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., நிலையில் உள்ளவர்கள் தினமும் 2 மணி நேரம் திறனாய்வு என்ற பெயரில் விசாரணை செய்து, பணிகளுக்கு இடையூறாக உள்ளது என புலம்புகின்றனர். இது குறித்து எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ