உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனப்பகுதியில் தீ தடுக்க வாட்ஸ் ஆப் குரூப் துவக்கம்

வனப்பகுதியில் தீ தடுக்க வாட்ஸ் ஆப் குரூப் துவக்கம்

கூடலுார் : வனப்பகுதியில் தீ பரவுவதை தடுக்க லோயேர்கேம்ப்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் உடனடியாக தகவல் பெறுவதற்கு வசதியாக 'வாட்ஸ் ஆப்' குரூப் துவக்கப்பட்டது.கடுமையான வெப்பம் காரணமாக வனப்பகுதியில் தீ பரவுவது அதிகரித்துள்ளது. தீ கொழுந்து விட்டு எரிவதால் இதனை அணைக்க உபகரணங்கள் வனத்துறையிடம் இல்லை. தனிப்பட்ட நபர்கள் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அதனால் தீ பரவுவதை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் லோயர்கேம்பில் ரேஞ்சர் முரளிதரன் தலைமையில் நடந்தது. வனவர்கள் பூபதி, சதீஷ்குமார், குருசாமி முன்னிலை வகித்தனர்.தீ பரவுவதை தடுப்பதற்காக இளைஞர்கள் குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் அமைக்கப்பட்டது. எந்த ஒரு இடத்திலும் தீ பரவுவது குறித்து தகவல் அளித்தால் உடனடியாக இக்குழு அதனை அணைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கும். மேலும் பாதுகாப்பாக தீயை அணைப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கவுன்சிலர் தினகரன், லோயர்கேம்ப் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி