குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன் 41, இவரது மனைவி நாகலட்சுமி 29, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் சாப்பிட்டுவிட்டு கணவர் மற்றும் மகனுடன் தூங்கி உள்ளார். நள்ளிரவில் கணவர் விழித்துப் பார்த்தபோது மனைவி நாகலட்சுமி மகன் பிரதீஷ்கா 7, இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவமுருகன் புகாரில் ராஜதானி எஸ்.ஐ., செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.