மனைவி கடன் பிரச்னை கணவர் தற்கொலை
போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் நித்தியசெல்வி 50. மதுரை அரசரடி தனியார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத் தேவைக்காக மதுரையை சேர்ந்த பலரிடம் ரூ. 60 லட்சம் வரை வட்டிக்க்கு கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பள்ளிக்கு சென்று கேட்டதால் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்களிடம் கணவர் குமார் 55. ன் அலைபேசி எண்ணை கொடுத்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை குமாரிடம் கேட்டு உள்ளனர். இதில் மனம் உடைந்த குமார் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.